கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்னமட்டரப்பள்ளி ஊராட்சி சித்தகம்பள்ளி கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட தெருக்களில் குடிநீர் குழாய் அமைக்க சிமெண்டு சாலைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். சாலைகள் சீரமைக்கப்படாததால் தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சாலை காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.