விழுப்புரம் சாலாமேடு செல்லும் வழியில் உள்ள வி.எஸ்.கே. நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு பணிகள் முடிந்த நிலையில் அந்த பள்ளத்தை மூடி அங்குள்ள சாலையை சீரமைக்காமல் தற்காலிகமாக மண்ணை அள்ளிப்போட்டு மூடியுள்ளனர். இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் அந்த மண்ணுக்குள் வாகனங்கள் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே அங்குள்ள சாலையை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?
......
......