காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கபணி நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. பணி முடிவடைந்த பகுதிகளில், சாலையின் இடையே தடுப்புக் கற்கள் வைக்கப்படாததால், விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.