கூடலூர் அருகே தொரப்பள்ளியில் இருந்து அள்ளூர்வயல் செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழை பெய்துவிட்டால், அந்த சாலை வாகன போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறிவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.