அறச்சலூரில் மெயின் ரோட்டோரம் 2 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட குழி இன்னும் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி சென்று வருகிறார்கள். வாகன ஓட்டிகள் சிலர் இரவு நேரத்தில் குழிக்குள் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?
ராஜு, அறச்சலூர்.