கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பத்தில் இருந்து எமகல்நத்தம் செல்லும் சாலை கடந்த 6 மாதத்திற்கு முன்பு தார்சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டது. அதன்பிறகு அந்த பணி ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை அதிகாரிகள் தாமதம் இன்றி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-மணி, காரகுப்பம்.