வேகத்தடை அமைக்க கோரிக்கை

Update: 2023-04-30 18:02 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே துத்திக்குளத்தில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி புதூர் வழியாக புறவழிச் சாலை செல்கிறது. இந்த நிலையில் அங்குள்ள 4 ரோடு சந்திப்பில் வேகத்தடை ஏதும் இல்லாததால் வாகனங்கள் வேகமாக சென்று வருகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வாகனங்கள் நின்று செல்லும் வகையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்