செங்கல்பட்டு மாவட்டம் , வண்டலூர் கண்ணிவாக்கம் குந்தன் நகரில் இருந்து வெளியில் செல்லும் சாலை கொட்டமேடு முதல் கூடுவாஞ்சேரி வரை செல்லும் சாலையில் இணைகிறது. இந்த சாலை முச்சந்திப்பு போல் உள்ளது. இதில் அடிக்கடி வாகனங்கள் வந்து செல்வதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. சந்திப்பு பகுதிகளின் இருபுறமும் தடுப்பு பலகைகளை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.