கம்மாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இப்பகுதி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம்.
