வேகத்தடை வேண்டும்

Update: 2023-04-26 14:20 GMT


திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும் செய்திகள்