விபத்துக்கள் தடுக்கப்படுமா ?

Update: 2022-07-22 10:36 GMT
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோட்டிலிருந்து வேப்பனப்பள்ளிக்கு பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக கிராமங்களில் நுழைவு பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் வேப்பனப்பள்ளி-கிருஷ்ணகிரி சாலைக்கு வரும்போது விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே வேப்பனப்பள்ளி-கிருஷ்ணகிரி சாலையில் முக்கிய இடங்களில் விபத்துக்களை தடுக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் விபத்துக்களை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ் , வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி

மேலும் செய்திகள்