ஓசூரில் பெங்களூரு- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் இருந்து லட்சுமிதேவி நகர், பிருந்தாவன் நகர் பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதடைந்து உள்ளது. இந்த பகுதி வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. சேதமடைந்த சாலையால் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பிரகாஷ், ஓசூர்.