புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள நெருஞ்சிக்குடியிலிருந்து கைவேலிபட்டி வழியாக செல்லும் சேரனூர் விளக்கு ரோடு வரை தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் மண் சாலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகின்றனர். இவர்கள் குண்டும், குழியுமான சாலையில் அவ்வப்போதும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.