ஊத்தங்கரை ஒன்றியம் மகனூர்பட்டி ஊராட்சி திருப்பத்தூர் சாலையில் இருந்து தாவூத் கொட்டாய் வழியாக உப்பாரப்பட்டி ஊராட்சி பேயனூர் வரை செல்லும் சாலையில் தார்கள் பெயர்ந்து கரடு முரடான மண்சாலையாக மாறிவிட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே உடனடியாக இந்த மண்சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணாயிரம், மகனூர்பட்டி, கிருஷ்ணகிரி.