வேகத்தடை வேண்டும்

Update: 2023-04-19 15:00 GMT


நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை 

மேலும் செய்திகள்