கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- திருப்பத்தூர் சாலையில் சின்ன மல்லப்பாடி வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் பள்ளிகளும் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. இந்த சாலையை பயன்படுத்தும் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை புதுப்பிக்க வேண்டும்.
-தரணி, பர்கூர், கிருஷ்ணகிரி.