சர்வீஸ் சாலையை விரிவுபடுத்தலாமே!

Update: 2022-07-21 16:38 GMT

கிருஷ்ணகிரி டோல்கேட்டில் இருந்து பஸ் நிலையம் இடதுபுறம் சர்வீஸ் சாலையில் பஸ்கள் செல்லும் வழியில் ஏராளமான லாரி பட்டறைகள் உள்ளன. இந்த சாலையின் இருபுறமும் ஆங்காங்கே லாரிகளை பழுதுபார்க்க நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள், எதிர்திசையில் இருந்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சர்வீஸ் சாலையை விரிவுபடுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யாரவிச்சந்திரன், ஓசூர்.

மேலும் செய்திகள்