நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகளூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் கூனவேலம்பட்டி புதூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மிக வேகமாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் சென்று வருகிறன்றன. இதனால் முதியோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.