சாலையில் சிதறும் ஜல்லிகற்கள்

Update: 2023-04-16 17:03 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதிகளில் ஏராளமான கிரானைட் குவாரிகள் உள்ளன. கிரானைட் குவாரிகளில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் லாரிகளின் மேற்பரப்பில் தார்பாய் போட்டு மூடாமல் அப்படியே எடுத்து செல்கின்றனர். இதனால் வேகத்தடைகள், வளைவுகளில் திரும்பும் போதும் மேற்பரப்பில் உள்ள ஜல்லி கற்கள் சிதறி சாலைகளில் ஆங்காங்கே விழுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகள் தான். மேலும் சிறு சிறு விபத்துகளும் தினமும் ஏற்படுகின்றன. எனவே ஜல்லி கற்களை ஏற்றி செல்லும் லாரிகளை தார்ப்பாய் கொண்டு மூடி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்