மதுரை மாவட்டம் மேலவெளி வீதி பெரியார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள சாலை குண்டும்- குழியுமாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து பிரதான மிக்க இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனஓட்டிகள் பயணிக்கின்றனர். மேலும் விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் பலர் இந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.