ஆபத்தான பள்ளம்

Update: 2023-04-12 17:32 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி ஊராட்சியில் பால் பண்ணைக்கு செல்லும் பிரிவு ரோடு உள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகே சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சந்திரன், அக்கியம்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்