குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-12 17:07 GMT

நாமக்கல் அருகே தாதம்பட்டிமேடு பகுதியில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்