சென்னை புதுப்பேட்டை துளசிங்கம் தெருவில் சாலைவசதி இல்லை. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சாலைப் பணி தற்போது வரை முடிக்கப்படவில்லை. மணல் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வழுக்கி விழுந்து விபத்துக்களும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் சாலையிலேயே தேங்கி வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே சாலைப்பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.