சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூர் மெயின் ரோட்டில் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடந்து வருகிறது. சந்தையின் முன்பு சில வியாபாரிகள் மண் தரையிலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராமசாமி, சேந்தமங்கலம், நாமக்கல்.