ஓசூர்- பெங்களூரு சாலையில் இருந்து தனியார் மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சீனிவாசன், கிருஷ்ணகிரி.