தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே காமராஜர் சாலை, ராஜன் சாலை, ராஜாஜி ரோடு, ராஜராஜசோழன் நகர் பகுதியில் புதிதாக சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் அந்த சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட வில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களினால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?