நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி 7-வது வார்டு பகுதியில் சாக்கடை கால்வாயை விட சாலை பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் சாக்காடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீருடன் மழை நீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வாரி சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும்.
-சுரேஷ், நாமக்கல்.