குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-05 16:57 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா எக்கூர் ஊராட்சி எக்கூர்- காமாட்சி கொட்டாய் இருளர் காலனிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். சிலநேரங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

-செல்வகுமார், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்