பாதி சாலை எங்கே?

Update: 2022-07-21 13:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் இந்திரா காந்தி சிலையிலிருந்து பெருங்களத்தூர் ரெயில் நிலையம் டிக்கெட் கவுண்டர் செல்லும் சாலையில் 7 மாதங்களுக்கு முன்பு மின்வயர் போடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இப்போது வரை சரி செய்யப்படவில்லை. இதனால் சாலையின் ஒரு பகுதி மேடாகவும் ஒரு பகுதி பள்ளமாகி சேதமடைந்தும் இருக்கிறது. அருகிலேயே பெரிய கால்வாய் ஒன்று உள்ளதால், மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலும் செய்திகள்