திருவாரூர் ரெயில்நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள நடைபாதையில் சிமெண்டு சிலாப் உடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் நிலை தடுமாறி தவறி விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த சிமெண்டு சிலாப்பை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்