செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் நல்லம்பாக்கம் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவே குண்டும் குழியுமான சாலையை விரைந்து சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.