நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதியில் கருவாட்டு ஆறு உள்ளது. அதன் அருகே உள்ள சாலை மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் வேகமாக செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-குமார், காரவள்ளி, நாமக்கல்.