ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2023-04-02 17:02 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் சவுதாபுரம் பஞ்சாயத்து அறமத்தாபாளையம் கிராமத்தில் நாடார் தெருவில் கழிவுநீர் வடிகால் வசதி செய்ய குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த தெருவில் ஏற்கனவே பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளதால் சாலை மிகவும் குறுகலாக மாறும். இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்