குண்டும், குழியுமான சாலை

Update: 2023-04-02 16:55 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் உள்ளன. மேலும் சின்ன எலசகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு முத்துமாரியம்மன் கோவிலை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த நிலையில், கோவில் முன்புறமுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, ஓசூர்.

மேலும் செய்திகள்