தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா உஞ்சினி கிராமத்தில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. பாலத்தில் உள்ள தடுப்பு சுவர் உடைந்து சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்துக்குள் விழும் சூழல் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் மேற்கண்ட பகுதியில் உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.