கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சாலை, சேலம் ரோடு, சப்-ஜெயில் ரோடு, காந்தி ரோடு போன்ற பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால், சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் பூச, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
ரமேஷ் கிருஷ்ணகிரி