கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மல்லப்பாடி காலனி அருகில் இருந்து மரிமாணப்பள்ளி பிரிவு ரோட்டில் உள்ள நிழற்கூடம் பழுதடைந்து பராமரிப்பின்றி உள்ளது. மேலும் அந்த நிழற்கூடம் அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்துவிடும் நிலையில் உள்ள இதனை அகற்றிவிட்டு புதிதாக நிழற்கூடம் கட்ட வேண்டும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மணி, மல்லப்பாடி காலனி, கிருஷ்ணகிரி.