சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-21 11:48 GMT

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் இருந்து கல்யாணி செல்லும் வழியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் பள்ளம்‌ இருப்பது தெரிவதில்லை. அதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே விபத்தை தடுக்க சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாணிக்கம், புதுச்சத்திரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்