மன்னார்குடியில் மகாமாரியம்மன் கோவில் சாலை உள்ளது. இந்த சாலையில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருமக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் காந்தி சாலையும் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாகும். இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.