மதுப்பிரியர்களின் கூடாரமாகும் சாலை

Update: 2023-03-26 10:59 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரிழந்தூர் பகுதி தேரடியில் இருந்து சிவன் கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த நிலையில் மாலை, இரவு நேரங்களில் தேரடி-சிவன்கோவில் செல்லும் சாலையில் மதுப்பிரியர்கள் கூட்டமாக மது அருந்துகின்றனர். இதன்காரணமாக அந்த சாலை மதுபிரியர்களின் கூடாரமாக மாறிவருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள், பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்