குண்டும்,குழியுமான சாலை

Update: 2023-03-26 10:56 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கொண்டப்பநாயக்கன் தெரு, அரிசிக்காரதெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்குகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்