கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஊட்டிக்கு செல்கிறது. மிகவும் வளைவான பகுதியில் உள்ளதால் கூடலூர் பஜாரில் இருந்து வரும் வாகனங்கள் மெதுவாக செல்கிறது. ஆனால் ஊட்டியில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக இயக்கப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி வரும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.