ஆபத்தான குழி

Update: 2023-03-19 17:11 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகா திண்ணனூர் நாடு ஊராட்சி வாசலூர்பட்டியில் படகு இல்லம் உள்ளது. இந்த படகு இல்லத்தின் நுழைவாயில் அருகே சாலை ஓரத்தில் ஒரு அபாய குழி உள்ளது. இந்த வழியே செல்லும் சுற்றுலா பயணிகளோ அல்லது மலைவாழ் மக்களோ அதில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே இந்த குழியை மூட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செந்தில், வாசலூர்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்