குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-19 17:02 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் ஊராட்சி அம்மேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு பர்கூரில் இருந்து எமக்கல்நத்தம் செல்லும் சாலை, அரசு உயர்நிலைப்பள்ளி பின்புறம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பழனிவேல், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்