கடமலைக்குண்டு கிராமத்தில் தேனி பிரதான சாலையில் இரண்டு புறமும் ஏராளமான கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் மற்ற பகுதிகளை விட கடமலைக்குண்டு கிராமத்தில் மட்டும் தேனி சாலையில் அளவு மிக குறுகலாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும்.