புதுச்சேரி- கடலூர் சாலையில் நோணாங்குப்பம் பாலத்தில் இருந்து முள்ளோடை வரை புதியதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தவளக்குப்பம் பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு சாலை போடும் பணி நடைபெற்றது. ஆனால் முழுமையாக பணி முடிக்காமல் சாலை மேடு பள்ளமாக ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை முழுமையாக போடவேண்டும்.