கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொத்தூரில் இருந்து டி.வி.எஸ். கம்பெனி வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள், ஏராளமான சிறு நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?
-துரைராஜ், ஓசூர்.