கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் கார்குடி பகுதியில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்ட சாலை உள்ளது. இந்த சாலையில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன விபத்துகள் நடைபெறும் அபாயம் உள்ளது. மேலும் சீசன் காலம் தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வர உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.