கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலை முழுவதும் ஜல்லிகற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-குமார், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.