தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 3-ம் மைல் பாலம் வரையிலும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.